லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தின சிறப்புத் திரைப்படமாக திரையரங்கிற்கு வந்தது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் வெளியாகிய இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
படம் திரையரங்கில் ஓடுமா என யோசித்துக் கொண்டிருந்த பலருக்கும் இந்த வசூல் சரியான பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியானது அதன்பிறகு OTT இணையதளத்தில் படம் வெளியாகி 15 நாட்களிலேயே வெளியானது.
ஆனால் இரண்டிலும் வசூல் கல்லா கட்டியது இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட போகிறது. பொதுவாக தொலைக் காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் போட்டி நிலவி வருவது உண்மை தான். அதிலும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவதற்கு பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொள்ளும்.
ஏனென்றால் ஒரு மாஸ் நடிகர் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் தொலைக்காட்சியின் ரேட்டிங் அதிகரிக்கும் என ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய படத்தை ஒளிபரப்ப முயற்சி செய்கிறார்கள். அப்படிதான் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இதுவரை முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த விசுவாசம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது என்றால் வசூலில் போட்டி போட்டுக் கொள்ளும் அப்படித்தான் தொலைக்காட்சிகளிலும் புதிய திரைப்படம் ஒளிபரப்பினால் டி ஆர் பி இல் போட்டி நிலவும். அந்த வகையில் நீண்ட காலமாக அஜித்தின் விசுவாசம் திரைப்படம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மாஸ்டர் திரைப்படம் வெளியானால் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.