தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன் இவர் பல திரைப்படங்களை அபூர்வமாக இயக்கி இவரும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் மற்றும் இவரும் இணைந்து நடிப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த தகவலை பார்த்து வந்தார்கள் அதுமட்டுமல்லாமல் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கௌதம் மேனன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த திரைப்படம் கூடிய சீக்கிரத்தில் முடிந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறி வருகிறார்கள்.இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 11.24 மணிக்கு வெற்றி மாறன் தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடுகிறார் எனவும் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைதளப்பக்கங்களில் அறிவித்துள்ளார்.
அதில் வெற்றியை தனது உழைப்பால் வென்றெடுக்கும் அகிலம் போற்றும் இயக்குனர் வெற்றிமாறன் தனது பாசறையில் பயின்ற மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடுவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதால்.
வெற்றியை தனது உழைப்பால் வென்றெடுக்கும் அகிலம் போற்றும் இயக்குநர் @VetriMaaran, தனது பாசறையில் பயின்ற @mathimaaran இயக்கத்தில்,@gvprakash, @menongautham இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் First Look Poster-ஐ,நாளை காலை 11.24 மணிக்கு தனது FB பக்கத்தில் வெளியிடுகிறார் @DGfilmCompany pic.twitter.com/r5dsyYAM2W
— Kalaippuli S Thanu (@theVcreations) September 11, 2021
பலரும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படம் எப்பொழுது வெளியானாலும் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்காக நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்பிக்கையுடன் கமெண்ட் செய்து வருவது படக்குழுவை உற்சாகப்படுத்துகிறது.