இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவரது கனவு படம் பொன்னியின் செல்வன் படம் தான். இந்த படத்தை எடுக்க பல தடவை முயற்சித்தாலும் அது தோல்வியில் முடிந்தது இருப்பினும் அந்த படத்தை எடுத்தே தீருவேன் என்பதற்காக தொடர்ந்து போராடினார்.
ஒரு வழியாக லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு தொடர்ந்து போஸ்டர்கள் பாடல் டீச்சர் என ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை கும்மாளம் அடிக்க வைத்தது.
அடுத்ததாக இந்த படத்தின் டிரைலரை வெளியிட பட குழு மிகப்பெரிய அளவில் திட்டம் போட்டு உள்ளது. இதற்காக ரஜினி கமல் என பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என தெரிய வருகிறது.
இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர். இதனால் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் பெரிய அளவில் இருக்கும் என தெரிய வருகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிட முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனை அறிவிக்கும் வகையில் சோழன் வருகிறான் செப்டம்பர் 6ஆம் தேதி ட்ரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் என ஒரு போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளதால் பெரிய அளவு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என தெரிய வருகிறது.