தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு எப்போது முடிகிறது தெரியுமா.? இணையத்தில் வெளியான அதிரடி தகவல் இதோ.!

vijay
vijay

தமிழில் எப்படியாவது ஒரு சில திரைப்படங்களை இயக்கி கூடிய சீக்கிரம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட வேண்டும் என பல விதமான கதை அம்சத்தை கொண்டு பல திரைப்படங்களை இயக்கி வெற்றி காண வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் புதிய புதிய கதைகளை தேர்ந்தெடுத்து பல முன்னணி நடிகர்களை தனது திரைப்படத்தில் நடிக்க வைத்து வரும் இயக்குனர்தான் நெல்சன்.

இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்திற்கு முன்பு தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியான பொழுது பல கோடி வசூல் செய்து விட்டது.

மேலும் தளபதி விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து எந்த இயக்குனருடன் கைகோர்த்து நடிப்பார் என்பது தெரியவில்லை இதனையடுத்து பலரும் கேட்டு வருவது என்னவென்றால் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் முதல் கட்ட படப்பிடிப்பு,இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்துவிட்டால் கூடிய சீக்கிரம் அடுத்தடுத்த பட காட்சிகளை எடுத்து விட்டு மீண்டும் லாக்டவுன் போடுவதற்குள் முழு படத்தையும் முடித்து விடலாம் என இயக்குனர் நெல்சன் மாஸ்டர் பிளான் ஒன்று போட்டுள்ளாராம்.

vijay
vijay

அதன்படி தற்போது நமக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படம் நவம்பர் இறுதியில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் பல சினிமா பிரபலங்களும் இதை தான் கூறி வருகிறார்கள்.