“கே ஜி எஃப் சாப்டர் 3” எப்பொழுது தொடங்குகிறது தெரியுமா? நடிகர் யாஷ் கொடுத்த தரமான பதில்..

YAASH-
YAASH-

தென்னிந்திய சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன அதில் ஒரு சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய வசூலை அள்ளி இருக்கின்றன. அந்த வகையில் அதல பாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவை ஒரே படத்தின் மூலம் இந்திய அளவில் தூக்கி நிறுத்தியது கேஜிஎப் திரைப்படம் தான்.

இந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார் யாஷ் தனக்கே உரிய ஸ்டைலில் சூப்பராக நடித்திருந்தார். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உடனடியாக கேஜிஎப் இரண்டாவது பாகமும் உருவானது.

ஆனால் அதில் சில தாமதங்கள் ஆனது ஒரு வழியாக பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து அண்மையில் இரண்டாவது பாகம் வெளியாகி முதல் பாகத்தை விட பிரம்மாண்டமான வசூலை அள்ளி சாதனை படைத்தது ஆம் கேஜிஎப் 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாகம் உருவாகும் என ஏற்கனவே படத்தில் சொல்லப்பட்டதை எடுத்து யாஷ் அடுத்து நடித்து வரும்  திரைப்படம் கே ஜி எஃப் மூன்றாவது பாகமா என கேட்டு வருகின்றனர் இதற்கு நடிகர் யாஷ் பதில் அளித்துள்ளார்.. என்னுடைய அடுத்த திரைப்படம் கேஜிஎப் மூன்றாவது பாகம் கிடையாது.? அது இப்பொழுது தொடங்க போறதும் இல்லை..

இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்க உள்ளார் அதனை முடிந்து தான் கேஜிஎப் 3 திரைப்படம் உருவாகும் ஆனால் அதற்கான சரியான நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என கூறினார் மேலும் நான் அடுத்தடுத்த படங்களில் சற்று வித்தியாசமாக நடிக்க இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.