திரை உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் இயக்குனர்களுக்கு இருக்கும் ஆசை என்றால் தன் வாழ்நாளில் தனது கனவு படத்தை எடுக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் திரையுலகில் பல உண்மை மற்றும் நாவல்களை மையமாக வைத்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
இருப்பினும் அவரது கனவு பொன்னியின் செல்வன் தான். அதை படமாக எடுக்க தான் அவர் பல தடவை முயற்சிதார் இருந்தாலும் தோல்வியை தான் சந்தித்தார். இருப்பினும் கைவிடாமல் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திற்காக முயற்சித்தார் கடைசியாக பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார்.
இந்த பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார். முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.
இதுவரை இந்த படத்தில் இருந்து போஸ்டர், பாடல், டீசர், டிரைலர் என அனைத்தும் மிரட்டலாக இருந்து வந்துள்ளது. இந்த படத்தை ரசிகர்கள், மக்களையும் தாண்டி சினிமா படங்கள் பலரும் பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர் மேலும் இந்த படம் பாகுபலி, கேஜிஎப் போன்ற படத்தின் வசூலை ஓவர் டேக் செய்யும் எனவும் இப்பொழுதே பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது அப்பொழுது இயக்குனரிடம் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் எப்பொழுது வெளியாகும் என கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த இயக்குனர் மணிரத்தினம் இன்னும் 9 மாதங்கள் கழித்து இரண்டாவது பாகம் ரிலீஸ் ஆகும் என அவர் கூறியுள்ளார்.