குக் வித் கோமாளி “புகழ்” திருமணம் எப்போது தெரியுமா? தேதியை லாக் பண்ணிய ஜோடி.!

pukazh
pukazh

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மக்கள் பலரின் கவனத்தை திசை திருப்பி ஃபேவரட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் புகழ். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிமுகமானவர்.

பின்பு இவரை அதிகம் பிரபல படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகளும் குவிந்தன அந்த வகையில் சினிமாவில் சூர்யா, அஜித், சந்தானம் போன்ற பல நடிகர்களின் படங்களில் தற்போது நடித்துள்ளார் மற்றும் இதைத் தவிர ஹீரோவாக கூட புகழ் மிஸ்டர் ஜீ கீப்பர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்து வரும் புகழ் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பென்சியா என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வருவதாக கூறி வந்தார் மற்றும் கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் பேசியிருந்தார் புகழ்.

இதனால் புகழ் எங்கு பார்த்தாலும் அவரது ரசிகர்கள் எப்போது திருமணம் என்ற கேள்வியை கேட்டு வந்தனர் மற்றும் சோசியல் மீடியாவிலும் அவரை இந்த கேள்வியை கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் அளிக்கும் வகையில் புகழ் மற்றும் பென்சியா திருமண தேதி சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

ஆம் இருவரும் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம். இந்த செய்தியை அறிந்த புகழ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் மற்றும் புகழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.