பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம் தெரியுமா.? தேதியை வெளியிட்ட விஜய் டிவி..

bigg-boss-7
bigg-boss-7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது அப்படி தமிழ்நாட்டையும் தாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த ஆறு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதனை எடுத்து விரைவில் சீசன் 7 அறிமுகமாக இருக்கிறது.

எனவே இதற்கான பணிகளில் பிக்பாஸ் குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது எப்பொழுது இந்த பிக்பாஸ் 7 துவங்க இருக்கிறது என்பது குறித்த தகவலை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் அறிமுகமாகி பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி தற்பொழுது தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருபவர்களும் இருந்து வரும் நிலையில் அதேபோல் இந்த வாய்ப்பை சரியாக பயன்டுத்திக் கொள்ளாமல் மக்கள் மத்தியில் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றும் வருகிறார்கள்.

எனவே பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வரும் நிலையில் 7வது சீசனில் யார் யார் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் 6வது சீசன் வெற்றிகரமாக ஜனவரி மாதம் முடிந்த நிலையில் இதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 7 அடுத்த மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே கலந்துக் கொள்ள இருக்கும் பிரபலங்களுக்கான ஆடிஷன் நடைபெற்ற வருகிறதாம் மேலும் நடிகர் கமலஹாசனும் தன்னுடைய ப்ரோமோ வீடியோவை முடித்து விட்டதாகவும் இன்னும் சில வாரங்களில் ப்ரோமோ வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 8ம் தேதி துவங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.