“பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி எப்போ தொடங்குது தெரியுமா.? தேதியை லாக் செய்த விஜய் டிவி..!

kamal
kamal

சின்னத்திரையில் பல்வேறு விதமான தொலைக்காட்சிகள் இருக்கின்றன ஆனால் விஜய் டிவி தொலைக்காட்சி சற்று அதிலிருந்து மாறுபட்டது ஏனென்றால் சீரியல்களை எவ்வளவு அதிகமாக கொடுக்கிறதோ அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களையும் தொடர்ந்து புதுவிதமாக கொடுத்து வருகிறது.

அதனால் இல்லதரிசிகளையும் தாண்டி ரசிகர்களையும் விஜய் டிவி பெரிய அளவில் கவர்ந்து இழுத்து உள்ளது. இல்லத்தரசிகள் தொடங்கி ரசிகர்கள் வரை பலருக்கும் ஃபேவரைட் நிகழ்ச்சியாக தற்போது விஜய் டிவியில் பார்க்கப்படுவது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் விஜய் டிவி பிரபலம் ரக்சன், டிடி, ராஜா ராணி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா மற்றும் பல பிரபலங்கள்.. பிக்பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த பிக் பாஸ் சீசனில் சாதாரண மக்கள் கூட கலந்து கொள்ளலாம் என அண்மையில் ப்ரோமோ எல்லாம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 6 – வது சீசனை தொகுத்து வழங்கப் போவது உலக நாயகன் கமலா சிம்புவா என பலரும் எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என உறுதியாகிவிட்டது இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 6 எப்பொழுது தொடங்குகிறது என்பது குறித்தும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி கோலாகலமாக தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது அதற்கான அப்டேட்டை விரைவிலேயே விஜய் டிவி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.