தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 230 கோடி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து OTT தளத்திலும் துணிவு திரைப்படம் டாப் 10 இடத்தை இரண்டு வாரங்கள் பிடித்து அசத்தியது.
இந்த படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் உச்சத்தில் இருந்த அஜித் உடனே ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார் அதன்படி லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் எல்லாம் வெளியாகி என ஆனால் சொன்ன தேதியில் ஸ்கிரிப்ட்டை தெளிவாக முடிக்கவில்லை மேலும் விக்னேஷ் சிவன் சொன்ன கதையும் சிறப்பாக இல்லாததால்..
அவரை கழட்டிவிட்டு மகிழ் திருமேனியிடம் தற்பொழுது தஞ்சம் அடைந்துள்ளது மகிழ் திருமேனியும் படத்தின் கதையை பக்காவாக ரெடி செய்து வருகிறாராம் இப்படி இருந்தாலும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை மேலும் முதல் கட்ட ஷூட்டிங் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளிவராததால் ஏகே 62 உருவாகுமா என்ற கேள்வியை பலரது மனதிலும் எழுந்தது..
இந்த நிலையில் தான் லைகா நிறுவனத்தின் உயரதிகாரி தமிழ் குமரன் ஏகே 62 படம் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது ஏகே 62 திரைப்படம் வெகு விரைவிலேயே தொடங்கப்படும் என சொன்னார் அதன்படி இந்த படத்தின் சூட்டிங் மே 15 தொடங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் லண்டனில் முதல் கட்ட ஷூட்டிங் என தகவல்கள் வெளி வருகின்றன.
அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சனோன் அல்லது ரித்திகா சிங்கர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வில்லை.. விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சோசியல் மீடியா பக்கத்தில் பெரிய அளவில் பரப்பி கொண்டாடி வருகின்றனர்.