விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுது எல்லாம் டிஆர்பி குறைகிறதோ அப்பொழுதெல்லாம் புதிய புதிய நிகழ்ச்சியை களம் இறக்கும் அந்த வகையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூவை வைத்து ராஜூ வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சியை நடத்தியது இதில் செலிபரிட்டி மற்றும் காமெடி பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்து போன நிகழ்ச்சியாக இருந்தது இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்க விஜய் டிவி முடிவு செய்தது அதன்படி பிக் பாஸ் சீசன் 6 -யும் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கி வைத்தது பிக் பாஸ் சீசன் 6 -ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் ஒருவராக யூடியூப் பிரபலம் ஜி பி முத்துவும் கலந்து கொண்டார். இவர் ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் ரொம்ப பிடித்து போனவராக மாறினார் ஏன் என்றால் இவர் பேசுவது பெரிதும் காமெடியாக இருக்கும் அதேசமயம் ரொம்பவும் வெகுளித்தனமாகவும் ஒன்னும் தெரியாத போல் இருந்ததால் பலருக்கும் ரொம்ப பிடித்து போனது.
இதனால் இவரை பலரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் மேலும் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என பல ரசிகர்களும் முடிவு செய்து இருந்தனர் இப்படி ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஜிபி முத்து 14 நாட்கள் கழித்து திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் காரணம் தனக்கு குழந்தைகள் மீது அதிக நினைவாக இருக்கிறது என சொல்லியே வெளி ஏறி உள்ளார்.
வெளியே வந்த அவர் முதலாக வீட்டுக்கு போய் தனது மகன், மகளை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அழகு பார்த்து உள்ளார் இதோ நீங்கள் பாருங்கள் அந்த வீடியோவை..