“காமெடி நடிகர் சூரி” சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக பார்த்து வந்த வேலை என்ன தெரியுமா.? ஒன்னு ரெண்டு கிடையாது ஏகப்பட்ட வேலை.

soori
soori

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சூரி. தமிழ் சினிமா உலகில் பல காமெடி ஜாம்பவான்கள் இருந்தாலும் அவரவர் ஒரு ஸ்டைல் இருந்தால் போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அந்த வகையில் நடிகர் சூரி என்று ஒரு தனி பாணி இருக்கிறது.

அது சிறப்பாக இருப்பதால் தொடர்ந்து வெற்றியை கண்டு வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டுள்ளார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருவழியாக இவரும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதி மெயின் ஹீரோ என்றால் இன்னொரு ஒரு முக்கிய ஹீரோ அம்சம் பொருந்திய ரோலில் நடிக்கிறார் சூரி. விடுதலை திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது. இப்படி சினிமாவில் சூரியின் வளர்ச்சி மிக உயரத்தில் இருக்கிறது.

ஆனால் சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக அவர் செய்து வந்த வேலை என்ன தெரியுமா.. முதலில் நடிகர் சூரி டிப்பர் லாரியில் கிளீனராக தான் தனது வேலையை தொடர்ந்தார் அதில் வரும் சம்பளத்தை வைத்து தான் உணவு, உடை போன்றவற்றை பார்த்துக் கொண்டாராம் இப்படி படிப்படியாக போக ஒரு கட்டத்தில் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அபார்ட்மெண்டில் வேலை செய்ய தொடங்கினார். அங்கு வரும் இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களிடம் நடிக்க சான்ஸ் கேட்டு ஒரு வழியாக சூரி சினிமா உலகில் புகுந்ததாக கூறப்படுகிறது.