நடிகர் சரத்குமார் சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக அவர் பார்த்து வந்த வேலை என்ன தெரியுமா.?

sarathkumar
sarathkumar

80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளி காட்டிய மக்களுக்கு இதுவரை சந்தோஷத்தை கொடுத்து வருபவர் நடிகர் சரத்குமார் ஆரம்ப காலகட்டத்தில் இவர் வில்லனாக நடித்தார் இப்போதும் அதையேதான் செய்து வருகிறார் அதிலும் பெரிதும் இவருக்கு வில்லன் ரோல் தான் கிடைக்கின்றன.

கொடுக்கப்படுகின்ற கதாபாத்திரத்தில்  திறம்பட நடித்து அசத்தி வருகிறார் 2021 ல் பெரிய ஆண்டாக அமையவில்லை என்றாலும் 2022 ல் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிறந்தநாள் பராசக்தி,பொன்னியின் செல்வம், வானம் கொட்டட்டும், அடங்காதே போன்ற தமிழ் படங்களில் நடிக்கிறார்.

இதையும் தாண்டி சரத்குமார் கன்னடத்திலும் பல்வேறு படங்களில் நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் அரசியல் தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வலம் வருகிறார். அண்மையில் கூட உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 ல் நடிகர் சரத்குமார் ஒரு நாள் மட்டும் வந்து போனதற்காக அவர் 10 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஷோவில் தன்னைப் பற்றியும் போட்டியாளர்களுக்கு பல அறிவுரைகளையும் கொடுத்துள்ளார். அதில் அப்படி அவர் கூறுவது : இப்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் மன வலிமை  மற்றும் பிட்னஸ் ஆகியவை  இருக்க வேண்டியது மிக முக்கியம் ஆரம்ப காலகட்டத்தில் நானே அப்படி இருந்திருக்கிறேன்.

ஆரம்ப காலகட்டத்தில் தெரு தெருவாக நியூஸ் பேப்பர் போடுவது மற்றும் கிடைக்கின்ற வேலைகளை  செய்துவதுமாக இருந்து வந்ததாக அவர் கூறினார். மன வலிமை,  மிக முக்கியம் என அவர் கூறி பேசினார் இதை பிக்பாஸ் போட்டியாளர்களும் கவனித்து உற்று நோக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது