மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்யப்பட்டிருந்தது.அந்த வகையில் பார்த்தால் விஜயுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார் தற்பொழுது லியோ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்தார்.
மேலும் தன்னுடன் இருக்கும் உதவி இயக்குனர்களிடம் எந்த ஒரு விஷயம் என்றாலும் உடனே பகிர்ந்து கொள்வாராம் லோகேஷ் கனகராஜ் ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் படத்தின் டைட்டிலேயே சொல்லாமல் அவர்களுக்கு விபூதி பூசிய சம்பவம் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஆம் இயக்குனர் லோகேஷ் விஜய் உடன் இணைய போகிறார் என்று தெரிந்த உடனே படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு பலரும் ஆர்வமாக இருந்தார்கள் அதேபோல் உதவி இயக்குனர்களும் இருந்தார்களாம் ஆனால் உதவி இயக்குனர்களிடம் படத்தின் பெயர் என்ன என்பது சொல்லாமல் இருக்க முடியாது அப்படி சொல்லிவிட்டால் அவர்கள் வெளியே லீக் செய்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்திலும் இருந்தாராம் லோகேஷ்.
அதற்காக அவர்களிடம் படத்தின் பெயர் வாத்தியென பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார் அதையும் உதவி இயக்குனர்கள் நம்பி வேலை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு மாதம் பிறகு படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நேரத்தில் வாத்தி தான் படப் பெயர் என நினைத்துக் கொண்டிருந்த உதவி இயக்குனர்களுக்கு சரியான விபூதி அடிக்கும் வகையில் படத்தின் பெயர் மாஸ்டர் என கூறியதும் உதவி இயக்குனர்களுக்கு ஒரே ஷாக்காக இருந்ததாம். மேலும் இந்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.