தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக இருப்பவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி முதலில் இவர் கிராஸ்டாக் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தனது பயணத்தை மேற்கொண்டார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் வெள்ளி திரையில் காமெடியனாக நானும் ரவுடிதான், ஸ்பைடர், தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது நயன்தாராவுடன் நல்ல நெருக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆனார்கள் ஒரு கட்டத்தில் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் கதையை நடிகை நயன்தாராவிடம் சொன்னார். அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே அது படமாக உருவாகியது. இந்த படத்தில் அவரும் நடித்திருந்தார் படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து வீட்டில் விசேஷம் என்னும் படத்தை எடுத்தார்.
இவர் எடுத்த இரண்டு படமுமே மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது அதனை தொடர்ந்து தற்பொழுது பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் சற்குணம் இயக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கிறார் அவருடன் கைகோர்த்து பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சின்ன ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஆர் ஜே பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் மூக்குத்தி அம்மன் திரைப்படம்..
குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.. மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு முதலில் ஹூடிபாபா என்ற டைட்டில் தான் ஆர் ஜே பாலாஜி வைக்க இருந்தாராம் ஒரு நாள் அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்மணியிடம் ஹூடிபாபா என்று படத்திற்கு பெயர் வைத்தால் படம் பார்ப்பீர்களா என கேட்டாராம் அதற்கு அவர் அப்படின்னா என்ன என கேட்டாராம் உடனே பாலாஜி மூக்குத்தி அம்மன் என டைட்டில் வைத்தால் பார்ப்பீர்களா என்றாராம் அதற்கு அந்த பெண்மணி சாமி படம் தானே நிச்சயம் பார்ப்பேன் என்றாராம்..
அதன் பிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சார் ஹூடிபாபா என்றால் கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும் அதனால் மூக்குத்தி அம்மன் என்ற பெயர் வைத்து விடுவோம் என்றார் அவரும் சரி என்று ஒப்புக்கொண்டாராம் அதன் பிறகு தான் இந்த திரைப்படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்ற டைட்டிலை வைத்தார்களாம்.. ஹூடிபாபா என்ற வார்த்தையை பஜாஜ் நிறுவனம் தான் தனது விளம்பரத்திற்காக அப்படி ஒரு பாடலை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.