தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்த டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை அதிக அளவு உயர்த்தி கொண்டவர் நடிகை சமந்தா சினிமா உலகில் எப்படி அசுர வளர்ச்சியை எட்டி நன்றாக ஓடினாரோ அதேபோலத் தான் வாழ்க்கையிலும் சிறப்பாக பயணித்தார் நடிகை சமந்தா தெலுங்கில் நாக சைதன்யா உடன் நடிக்கும் போது காதல் வயப்பட்டு பின் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆன பிறகு இருவரும் குடும்ப வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி சிறப்பாக செயல்பட்டு ரசிகர்கள் மத்தியில் சிறந்த ஜோடிகளாக மாறினார். இப்படி வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் யார் கண்ணு பட்டதோ என்னவோ நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா நான்கு வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இப்பொழுது தனது எண்ணங்களை மாற்றி சினிமா உலகில் எந்த கதாபாத்திரமும் வந்தாலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இருப்பினும் அவ்வப்போது சமந்தா நாக சைதன்யா பற்றி கூறுவது வழக்கம். அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா நாகசைதன்யா குறித்து பேசியிருந்தார்.
அதில் நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் எனக் கேட்டதற்கு பில்லோ என கூறியிருந்தார் இப்பொழுதும் நாகசைதன்யா குறித்து பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்று நாக சைதன்யா உங்களுக்கு முதலில் வாங்கி கொடுத்த பரிசு என்னவென்று கேட்டனர் அதற்கு நடிகை சமந்தா எனக்கு அவர் முதலில் வாங்கிய கொடுத்த பரிசுப் பொருள் .
ஹேண்ட்பேக் எனவும் தனக்கு பிடித்த வாசகத்தை அவரது கையால் எழுதி தனக்கு அதை பரிசாகக் கொடுத்தால் அது எனக்கு மிகவும் பிடித்த பொருள் அது ஒரு நினைவாக மாறியதாக கூறினார். இச்செய்தி இணைய தள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது தீயாய் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.