தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் தளபதி விஜய் இவர் கடைசியாக கூட மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் பிரம்மாண்ட வசூலை அள்ளியது. அதை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் பிரமாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறது படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தை விருவிருப்பாக முடித்து விட்டு தனது 66 வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் விஜய் அந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் தடம் பதிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றி அவ்வபோது அரசியல் மற்றும் வாழ்க்கை பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அதுபோல இப்பொழுது ஒரு செய்தி இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் விஜய் 1999ஆம் ஆண்டு தனது தீவிர ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டபிறகு நடிகர் விஜயின் சினிமா பயணம் வேற லெவலில் இருந்து வந்துள்ளது. சொல்ல போனால் சமீபகாலமாக சங்கீதா தான் கதைக்கு ஏற்றபடி நடிகைகளை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது இதற்கு விஜய் பர்மிஷன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவையும், வாழ்க்கையையும் சரியாக புரிந்து இருவரும் பயணிக்கின்றனர். இந்த நிலையில் முதன் முதலில் நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை சந்தித்தபோது அவருக்கு கொடுத்த பரிசு என்ன என்பது பற்றிய தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அப்படி பார்க்கையில் நடிகர் விஜய் சங்கீதா அவர்களுக்கு முதலில் கொடுத்த பரிசு மோதிரம் தானாம்.