இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பாதித்து வாங்கிய முதல் கார் என்ன தெரியுமா.? அந்த காருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.!

lokesh-
lokesh-

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி வெற்றிகொண்டு உள்ளவர் லோகேஷ் கனகராஜ் இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் அண்மையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தையும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக எடுத்திருந்தார்.

இவர் எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறியதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சினிமா பயணம் தற்பொழுது அசுர வளர்ச்சியை தொட்டுள்ளது. குறிப்பாக இந்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக பார்க்கப்படுவது கமலின் விக்ரம் திரைப்படம் தான்.

இந்த படத்தின் கதைகளும் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போகவே இந்த படம் தமிழை தாண்டி அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாகவே வசூல் வேட்டையும்  சூப்பராக நடத்தியது விக்ரம்.

range rover
range rover

இந்த படம் உலகம் முழுவதும் சுமார் இதுவரை 410 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற தமிழகத்தில் மட்டுமே சுமார் 170 கோடி வசூலித்துள்ளதாம். விக்ரம் திரைப்படம் வெளியாகி ஐந்து வாரத்தைத் தொட்டுள்ள நிலையில் தற்போது கூட 150 திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த படத்திற்கான வசூல் தற்பொழுதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

இது இப்படி இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி ஒரு பேட்டி ஒன்றில் தான் வாங்கிய முதல் கார் எது என்பது குறித்து அவர் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது நான் வாங்கிய முதல் கார் ரேஞ்ச் ரோவர் என கூறியுள்ளார். அந்த காருடன் லோகேஷ் கனகராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

lokesh first car
lokesh first car