நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் முதலில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் காலப்போக்கில் இவருக்கு ஆக்சன் படங்கள் வெற்றியை கொடுக்க தொடர்ந்து நடிகர் விஷால் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து அசத்து வருகிறார்.
இருப்பினும் இவர் நடித்த கடைசி சில திரைப்படங்கள் தோல்வியை தான் தழுவி உள்ளது. விஷால் வெற்றி படத்தை கொடுக்க அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஷால் கையில் லத்தி, துப்பறிவாளன் 2, mark auntony ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது.
முதலாவதாக லத்தி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். லத்தி திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா மற்றும் பலர் நடித்த வருகின்றனர் இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் 44 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களை சற்று வருத்தம் அடையச் செய்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை விஷால் திருமணம் செய்ய இருந்தது. ஆனால் நிச்சயதார்த்தம் வரை சென்று பின் கடைசியில் ட்ராப் ஆனது. இந்த சமயத்தில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றியத்தில் தனது திருமணம் குறித்து கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் சொன்னது. அப்பா, அம்மா பாக்குற பொண்ணு எனக்கு செட் ஆகுமான்னு தெரியல நிச்சயமா நான் காதல் திருமணம் தான் செய்வேன் இப்பவும் காதலிச்சுகிட்டு தான் இருக்கேன் விரைவில் அந்த பொண்ணு யாருன்னு சொல்றேன் என கூறி உள்ளார்.