மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் புஷ்பா, ஆர் ஆர் ஆர் படத்தின் மொத்த ரன்னிங் டைம் மற்றும் சான்றிதழ் என்ன தெரியுமா.?

RRR-AND-PUSPA
RRR-AND-PUSPA

தெலுங்கு சினிமாவில் சமீப காலமாக மிக பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளிவந்து நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றன. அந்தவகையில் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் ராஜமௌலி பாகுபலி சீரியஸை வெற்றிகரமாக முடித்து  அசத்தினார்.

அடுத்ததாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியவர்களை வைத்து  RRR என்ற திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில்  எடுத்து முடித்துள்ளார். இந்த படம் ஒரு வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

பாகுபலி படத்தைப் போன்று ஆர் ஆர் ஆர் படமும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.  இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி தற்போது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது மேலும் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் 54 வினாடிகள் என தெரியவந்துள்ளது.

மேலும் தெலுங்கில் ஆர் ஆர் ஆர் படத்தை தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது அல்லு அர்ஜுனின் “புஷ்பா” படம். புஷ்பா படத்துடன் எந்த படமும் போட்டி போடுவதால் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டிரைலர் கூட அண்மையில் வெளியானது தற்போது இந்த படம் யு/ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் மொத்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் 16 வினாடிகள் ஆகும்.