மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய காமெடி நடிகர்கள் பலரும் தற்பொழுது சினிமா பக்கமே வரவில்லை அதற்கு முக்கிய காரணம் பல காமெடி நடிகர்களும் வேறு வேறு தொழில்களைச் செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் ஒரு காலத்தில் மிகவும் நகைச்சுவை நடிகர் என்று மக்களால் பெயர் எடுத்து வந்த நடிகர் தான் தாமு.
இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இந்த கதாபாத்திரத்தை மக்கள்கள் மறக்கவே மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும் அதன் பின்பு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது மாணவர்களுக்காக ஒரு சேவையை செய்து வருகிறார்.
ஒருமுறை சன் டிவியில் கலக்கல் காமெடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்போது அவர் முன்னால் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாம் உதவியாளராக கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் பணியாற்றி வந்தார் தற்பொழுது டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூறிய படி அவர் குழந்தைகள் கல்வி ஆலோசகராகவும் இருந்தார்.
பின்பு சினிமாவில் நடிகராக இருந்த என்னை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார் அவர் கூறியது போலவே என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது மக்கள் உன்னை விரும்புவதாக அவர் என்னிடம் கூறினார்.எனவே டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர் கூறியபடியே நான் 7 லட்சம் மாணவர்களையும் 8000 ஆசிரியர்களையும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்களையும் என்னை சந்திக்க வைத்தார் அப்போதிலிருந்தே நான் மாணவர்களுக்காக முழு நேர சமுதாயத்திற்கு செலவிட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி அப்துல் கலாம் ஐயாவுடன் இருந்தால் பல பிரபலங்களும் உடனே மாறிவிடுவார்கள் அவர் கூறிய வார்த்தைகளை வைத்து இவர் மாணவர்களுக்காக தற்பொழுது பொது சேவையை செய்து வருவது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.