சினிமா உலகில் ஒரு ஹீரோ ஒன்று அல்லது இரண்டு வெற்றி படங்களை கொடுத்து விட்டால் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று விடலாம் என்பது ஊரறிந்த விஷயம் ஆனால் வில்லன்கள் அப்படி கிடையாது என்ன தான் அவர் பல படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து படத்தை வெற்றி பெற செய்தாலும் அவரால் நிலைத்து நிற்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமா கதைக்கு ஏற்றார் போல வில்லன்களை மாற்றி வருகிறது வழக்கம்.
அப்படி தமிழ் திரை உலகில் மிரட்டும் வில்லனாக வலம் வந்தவர் வித்யூத் ஜம்வால் இவர் தமிழில் பில்லா 2 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இத்திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார். அதுவும் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், சூர்யாவின் படங்களில் இவர் சிறப்பான ரோல்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவிற்கு பிரபலம் அடைந்தார் மேலும் அவர் சினிமாவுலகில் ஹீரோவாகவும் தற்போது நடித்து வருகிறார்.
இவர்அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் இவர் மக்கள் மற்றும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டார்இப்படி வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியது தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகரின் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
நாம் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்னால் சாதாரணமாக மனுஷன்கள் தான் ஆனால் ஃபேமஸ் ஆகும் பொழுது நம்மை அனைவரும் மதித்து நடப்பார்கள் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் நான் சினிமா உலகில் நடிக்க தொடங்கியபோது எனக்கு யாரையும் தெரியாது எனினும் மரியாதையாக நடத்தினார்கள்.
அதிலும் குறிப்பாக தல அஜித் சினிமா உலகில் ஆரம்பத்தில் என்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார் என்று குறிப்பிட்டார் அதுபோலத்தான் சூர்யா அவர்களும் யாரென்று தெரியாத ஒருவரை சிறப்பாக மதிக்க கூடியவர் அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மரியாதை தெரிந்தவரும் கூட என குறிப்பிட்டார்.