விஜயுடன் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட இளம் நடிகர் – தளபதி சொன்ன பதில் என்ன தெரியுமா.?

vijay
vijay

நடிகர் ஜெய் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹிரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார் இருப்பினும் அண்மை காலமாக இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்துள்ளன அதிலிருந்து மீண்டு வர அவரும் புதிய புதிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சசிகுமார் உடன் அண்மையில் கைகோர்த்து ஜெய் நடித்த திரைப்படம் காபி வித் காதல்.. இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெய்யுடன் கை கோர்த்து ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, டிடி, அமிர்தா ஐயர், மாளவிகா சர்மா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் ஜெய் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.. நடிகர் ஜெய் 2002 ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து அறிமுகமானார் அது குறித்து அவர் பேசியது இந்த படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன.

இதில் பல மேஜிக் மூமென்ட் இருக்கின்றன என கூறினார் மேலும் பேசிய அவர் விஜய் இந்த படத்தில் எனக்கு ஒரு சீனியர் நடிகராக இல்லாமல் ஒரு நண்பர் போல் அவர் பழகிய விதம் சூப்பராக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அவரை நான் சந்தித்து மீண்டும் உங்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என கூறினேன்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார் அவர் சொன்னது நீ உன்னுடைய படங்களில் லீடிங் ரோலில் ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்து எனக்கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால் நிச்சயம் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்தால் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பேன் என கூறியுள்ளார்.

jai
jai