மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த சூரி மீடியாவிற்கு என்ன சொன்னார் தெரியுமா.!

soori

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் இன்று பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு பல சினிமா பிரபலங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் அதிகப்படியான வசூல் அளிக்கும் மேலும் நல்ல விமர்சனம் பெற வேண்டும் எனவும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக மாஸ்டர் பட குழுவில் பணியாற்றி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத், மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திரங்கள் தியேட்டரில் முதல் ஷோவை பார்த்துள்ளார்கள் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடியே மிகவும் வைரலாகி வந்தது.

இந்நிலையில் காமெடி நடிகர் பரோட்டா சூரி மாஸ்டர் திரைப்படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்துவிட்டு பிரபல செய்தியாளர்களின் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த பேட்டியில் சூரி நல்ல விமர்சனத்தை கொடுத்திருக்கிறார் என்று விஜயின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறிவருகிறார்கள்.

soori
soori