சினிமா உலகில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்கள் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து ஓடிக் கொண்டிருந்தாலும் ஒரு சில காரணங்களால் இவர்களும் நல்ல கதையை தவற விட்டு வேறு ஒரு நடிகருக்கு அந்த நல்ல கதையை கொடுத்து விடுகின்றனர் அப்படி நடிகர் தனுஷுக்கும் நடந்துள்ளது.
இவர் காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு.. பிறகு பாலாஜி சக்திவேல் ஒரு படத்தின் கதையை கூறி இருக்கிறார் ஆனால் அந்த படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி சரியில்லை எனக் கூறிய தனுஷ் அந்த கதையை நிராகரித்து விட்டார். பின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அந்த கதையை பாய்ஸ் மணிகண்டனை வைத்து உருவாக்க திட்டமிட்டார்.
முதலில் மணிகண்டனை வைத்து டெஸ்ட் சூட்.. எடுத்த போது கதாநாயகிக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகாததால்.. அவரை தூக்கிவிட்டு கடைசியாக நடிகர் பரத்தை ஒப்பந்தம் செய்தார் பாலாஜி சக்திவேல் இருவருக்கும் நல்ல பொருத்தம் இருந்ததால் அந்த படம் அப்பொழுது உருவானது.
அந்த படம் வேறு எதுவும் அல்ல 2004 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற காதல் திரைப்படம் தான். இந்த படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் எஸ் பிக்சர்ஸ் மூலம் இந்த படத்தை அவர் தயாரித்தார். இந்தப் படம் பட்ஜெட்டையும் தாண்டி பல கோடி லாபம் பார்த்தது.
இந்த படம் நடிகர் பரத்துக்கும் சரி, சந்தியாவுக்கும் சரி அப்பொழுது ஒரு திருப்புமுனை படமாக அவர்களது கேரியரில் அமைந்தது இந்த படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு தனுஷ் இப்படி ஒரு சிறந்த படத்தை தவற விட்டுவிட்டு என மனதில் நிச்சயமாக நினைத்து இருப்பார் என கூறப்படுகிறது.