நேற்று அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகி தற்போது வெற்றியை கொண்டாடி வருகிறது சார்பட்டா பரம்பரை படம். படத்தை பார்த்த இயக்குனர்கள் தொடங்கி மக்கள் வரை பலரும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளிவருவதொடு சமூகவலைத்தள பக்கத்தில் தனது கருத்துக்களையும் கூறிவருகின்றனர்.
இந்த அளவிற்கு சிறப்பாக எடுத்துள்ளார் பா ரஞ்சித் மேலும் இந்த திரைப்படத்திற்காக ஒவ்வொருவரும் பல மாதங்கள் கஷ்டப்பட்டு தான் இந்த திரைப்படம் நடித்துள்ளனர். அதற்கு பலனாக தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருவதால் அதில் நடித்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் உச்சியில் கிடைக்கின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் சினிமாவில் டாப் இயக்குனர்கள் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு ஒவ்வொருவரையும் புகழ்ந்து பேசி உள்ளனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை எடுத்து தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை படைத்துள்ள செல்வராகவன் இந்த படத்தை பார்த்துவிட்டு சமீபத்தில் ட்வீட் ஒன்று போட்டுள்ளார் அவர் கூறியது.
சார்பட்டா பரம்பரை நல்ல திரைப்படம் பா. ரஞ்சித் ஒவ்வொரு சிறு பகுதியையும் நான் பார்த்து ரசித்தேன் ஆர்யா அழகு ஒவ்வொரு பிரேமிலும் ஜோலித்தீர்கள் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து சுசீந்திரன் இந்த படத்தை பாராட்டி ஒரு கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார்.
அவர் கூறியது இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது இருப்பினும் ஒரு வழியாக OTT தளத்தில் வெளியாகி வெற்றியை குவித்து வருகிறது. இந்த திரைப்படம் பா ரஞ்சித்துக்கு மிகப்பெரிய ஒரு சிறப்பு வாய்ந்த படம் என கூறி வாழ்த்து தெரிவித்தார் மேலும் இதில் பணியாற்றிய பலருக்கும் தனது வாழ்த்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் கூறியதை நீங்களே பாருங்கள்.