அந்த சீனில் நீ உண்மையாக அழ வேண்டும் மணிரத்தினம் போட்ட கண்டிஷன் – சரண்யா பொன்வண்ணன் செய்த வேலை என்ன தெரியுமா.?

manirathinam-
manirathinam-

80, 90 கால கட்டங்களில் ஹீரோயின்னாக நடித்த நடிகைகள் பலரும் இப்பொழுது அம்மா, சித்தி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலைகாட்டி ஓடுகின்றனர் அந்த வகையில் நாயகன், என் ஜீவன் பாடுது, அஞ்சலி போன்ற படங்களில் ஹீரோயிnனாக நடித்த சரண்யா பொன்வண்ணன் இப்பொழுது தொடர்ந்து டாப் ஹீரோயின் படங்களில் அம்மா சித்தி கெஸ்ட் ரோல் போன்றவற்றில் நடித்து அசதி வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஒரு சில படங்களில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது அந்த வகையில் தென்மேற்கு பருவக்காற்று, வேலையில்லா பட்டதாரி, ராம் என சொல்லிக் கொண்டே போகலாம் இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கு   இன்னமும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்திருப்பதால் இவரு மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சரண்யா பொன்வண்ணன் சில தகவல்களை கொடுத்திருக்கிறார் அது குறித்து விவலாவாரியாக பார்ப்போம்.. நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடந்த சுவாரசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். மணிரத்தினம் ஒரு காட்சியை மிகவும் பொறுமையாக எடுப்பார் ஆதலால் அந்த காட்சி நடிப்பதில் ஒரு ஆழ்ந்த ஈடுபாடு வந்து விடும் நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் கமல் தனக்கு தாலி கட்டுவார்.

அந்த காட்சிகள் நான் நிஜமாக அழ வேண்டும் என மணிரத்தினம் கூறினார். நான் சத்தமாக சிரித்து விட்டேன் அதன்பின் மணிரத்தினம் நான் அழும்வரை காத்திருப்போம் என கூறினார் அவர் சும்மா விளையாட்டுக்கு தான் சொல்லுகிறார் என நினைத்தேன் ஆனால் பட குழுவினர் நான் அழுவதற்காக வெகுநேரம் காத்திருந்தனர் எனக்கு வெகுநேரமாகியும் அழுகையே வரவில்லை.

என்ன செய்வது என தெரியவில்லை நான் எப்படியும் அழுது தான் ஆக வேண்டும் என கூறிவிட்டனர் அப்பொழுது அழுகை வரவில்லை அதன் பின்னர் நான் அமீரின் ராம் படத்தில் நடித்த போது உண்மையாகவே அழ வேண்டும் என கூறினார்கள் அப்பொழுது எனக்கு உடனே அழுகை வந்துவிட்டது. அன்று மணிரத்தினம் கூறியதை ராம் படபிடிப்பின் போது ஒப்பிட்டு பார்த்தபொழுது என்னுடைய வளர்ச்சியை என்னால் உணர முடிந்தது என கூறினார்.