Ajith :தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், ரெஜினா, பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் ஆரவ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த வருகின்றனர்.
படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் அஜித் மற்றும் ஆரவ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அஜீத்தை பற்றி பழைய பேட்டி ஒன்றில் ஆரவ் கூறி இருந்தது என்னவென்றால்.. அஜித்தின் எல்லா படங்களையும் நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசிப்பேன்..
ஏகே 61 அஜித் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒரு சமயம் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது அதை பார்த்து ஆரவ் பிரமித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து எப்படி இந்தளவுக்கு சார்மியாக இருக்க முடிகிறது பதிவிட்டு இருந்தார். அதுவும் அஜித் சாரை ஃபேமிலியுடன் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என கூறியிருந்தார்.
அவரைப் பின்பற்றி தான் பல விஷயங்களை நானும் செய்து வருகிறேன் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் அஜித் சார் தான். எனக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது இதுவும் அஜித் சாரின் இன்ஸ்பிரேஷன் தான் என ஆரவ் கூறினார் மேலும் ராமோஜி ஃபிலிம் சிட்டி சி.இ.ஓ வுடன் ஆரவ் பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்பொழுது சி.இ.ஓ எல்லா நடிகர்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தாராம் அஜித்தை பற்றி அவர் சொன்னது.. மிகவும் எளிமையானவர் அவர் அவரது வாழ்க்கையை பார்க்கும் விதம் வித்தியாசமானது தனக்கு என்று எந்த ஒரு பாடிகாடும் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார் ஷூட்டிங் முடிந்ததும் நைட் கேஷுவலாக தான் இருப்பார்.
இந்த ஃபிலிம் சிட்டிக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார் என அவர் சொல்லியிருக்கிறார் இதை பார்த்த ஆரவ் நம் கோலிவுட்டில் அஜித்தை பற்றி இப்படி சொல்லி இருந்தால் ஒன்றும் பெரிதாக தெரிந்திருக்காது ஆனால் இங்கு இருக்கிறவங்க அஜித்தை இப்படி சொல்லும் போது அஜித் எத்தனை பேரை கவர்ந்து இருக்கிறார் என்பதைப் பார்க்க முடிகிறது என கூறியுள்ளார்.