கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த நெல்சனுக்கு பீஸ்ட் படம் மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்தது. இதிலிருந்து மீண்டு வர ரஜினி உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன்..
வசந்த் ரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது அவர்கள் அனைவரையும் தயாரிப்பு நிறுவனம் புகைப்படத்துடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியது கடைசியாக இந்த படத்தில் தமன்னாவும் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சனுக்கு படக்குழு சைடுல இருந்து நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் கிடைத்துள்ளது. ஏற்கனவே நெல்சன் ஜெயிலர் படத்தின் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்தார் ஒரு வழியாக தற்போது படத்தை எடுத்து வருகிறார். படத்தில் 30 நிமிட பிளாஷ்பேக் காட்சி இருக்கிறது அதை ஒழுங்காக எடுத்து முடித்து ரஜினியுடன் போட்டு காட்டி இருக்கிறார்.
அதை பார்த்த ரஜினி காட்சி மிக அற்புதமாக இருக்கிறது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது எனக் கூறிய நெல்சனை புகழந்து இருக்கிறார் இதனால் செம்ம சந்தோஷத்தில் இருப்பதுடன் மட்டுமல்லாமல் மீதி கதைகளையும் சூப்பராக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் இதனால் ஜெயிலர் படம் வெற்றி பெறுவது உறுதி என சொல்லப்படுகிறது.
பீஸ்ட் படத்தில் ஏற்பட்ட எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஜெயிலர் படம் தக்க பதிலடி கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சனுக்கு எப்படி இந்த படம் முக்கியமோ அதேபோல ரஜினிக்கும் ஜெயிலர் படம் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..