Rajini called Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தளபதி விஜய் அவர்களை வைத்த லியோ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் 900 to 950 ஸ்கிரீனில் லியோ திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகியது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் லியோ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் ட்ரைலர் சும்மா மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் யார் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமிருந்து வந்த நிலையில், தலைவர் 171-வது திரைப்படம் ஆன ரஜினி திரைப்படத்தை தான் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது அதிலிருந்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அப்பொழுது தலைவர் 171 வது திரைப்படம் குறித்து அவர் பேசியுள்ளார் அப்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ரஜினி சாரிடம் கதை சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்களிடம் 20 நிமிட கதையை மட்டும் தான் கூறினேன் ஏனென்றால் லியோ சூட்டிங் இருந்ததால் சரியாக சொல்ல முடியவில்லை என்பது போல் கூறி இருந்தார்.
இசை வெளியீட்டு விழா… நாங்க பயந்துட்டோம் அதனாலதான்.. உண்மையை ஒப்புக்கொண்ட லோகேஷ் கனகராஜ்.!
தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போன் செய்ததாகவும் அப்பொழுது போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டு மொத்த அசிஸ்டன்ட் டைரக்டர்களும் இருக்கும்பொழுது இப்பொழுது சொல்லுங்கள் சார் எல்லாரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் எனக் கூறியதாகவும். அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தூள் கிளப்பிடலாம் கண்ணா என ரஜினி கூறியதாக லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே தூள் கிளப்பிடலாம் என கூறியதால் தலைவர் 171 வது திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக மிரட்டலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.