“தாதா சாகேப் பால்கே” விருதை பெற்ற பிறகு ரஜினி சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.? சூப்பர் செய்தி இதோ.

rajini
rajini

சாதனை படைக்கும் ஒவ்வொருவருக்கும் தேசிய விருதை கொடுத்து அழகு பார்க்கிறது அரசாங்கம். அந்த வகையில் சினிமா உலகில் சாதனை படைத்தவர்களுக்கு விருது அழகு பார்க்கப்படுகிறது. இன்று டெல்லியில் தற்போது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு உயரிய விருது வழங்கப்பட அறிவித்திருந்தது அதன்படி நேற்று ரஜினி கூட எனக்கு நாளைக்கு விருது வாங்கப் போவதாக அவர் சொல்லியிருந்தார்.

அதன்படி டெல்லி சென்றார் ரஜினி தற்போது “தாதா சாகேப் பால்கே” விருதை பெற்றார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வந்தது விருது பெற்றதை தொடர்ந்து ரஜினியை இந்த விருதை எனது இயக்குனர் இமயம் பாலசந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் எனக் கூறி அசத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல் சினிமா உலகில் நான் நாற்பது வருடங்களாக ஓடிக்கொண்டிருக்க காரணமாக இருக்கும் “என்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு நன்றி”  கூறினார்.  கர்நாடகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமா அடுத்த பட வாய்ப்பைக் கொடுத்து அவரது திறமையை வெளிகாட்ட வைத்தது.

ஒரு கட்டத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்நாட்டிலேயே செட்டிலாகி கொண்டதோடு தனக்கென ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கினார். இதுதான் தற்போது இவர் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருப்பதை சரியாகச் சொல்லி சொல்லி உள்ளார் ரஜினி. தமிழ்நாட்டு மக்கள் மற்றும் ரசிகர்கள்  பெருமையாக இருப்பதோடு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.