இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இதனால் இயக்குனர் லோகேஷின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் அண்மையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்தார்.
இந்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் என்றாலும் விக்ரம் திரைப்படம் தான் அதிக வசூல் பெற்றது. கமல் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 410 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயுடன் கைகோர்த்து தளபதி 67 படத்தை எடுக்க இருக்கிறார்.
விஜய் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது இது முடித்தவுடன் லோகேஷ் விஜய் உடன் இணைக்கிறார். லோகேஷும் அதற்கான கதையை தற்பொழுது செதுக்கி வருகிறார் மறுபக்கம் அந்த படத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளையும் தட்டி தூக்கி வருகிறாராம்.
இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் அண்மையில் பேட்டி ஒன்றில் ரஜினி மற்றும் அஜித்தை வைத்து படம் பண்ண ஆசை என கூறினார் அண்மையில் ரஜினி லோகேஷ் கனராஜை கூப்பிட்டு நீங்கள் இயக்கிய விக்ரம் படத்தை நான் இரண்டு முறை பார்த்தேன் படம் சூப்பராக இருக்கிறது நாம் இருவரும் நிச்சயமாக ஒரு படம் பண்ணுவோம் என கூறியுள்ளாராம் இதனால் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து படம் பண்ண அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய் கமலுக்கு ஹிட் படங்களை கொடுத்ததை தொடர்ந்து லோகேஷின் அடுத்த குறி ரஜினி அடுத்ததாக அஜித் என கூறப்படுகிறது. அதில் ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் தற்போது கிட்டத்தட்ட சாத்தியமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.