வெள்ளித்திரையில் பல நடிகர்களும் ஒரு விழாவில் கலந்து கொண்டால் அதில் தனக்கு கல்லூரி படிக்கும் பொழுது நடந்த நிகழ்வுகளை பற்றி கூறி சந்தோஷப்படுவார்கள் அந்த வகையில் பார்த்தால் சமீபகாலமாகவே பல நடிகர்கள் கல்லூரி மற்றும் பள்ளி பருவ நிகழ்வுகளை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள் அதே போலத்தான் நடிகர் சூர்யாவும் தனது கல்லூரி நிகழ்வுகளை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம்.
சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் சூர்யா அதிலும் குறிப்பாக இவரது திரைப்படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவர் சென்னை லயலோ கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடதக்கது இந்த கல்லூரியில் நிறைய நடிகர்கள் நிறைய இயக்குனர்கள் படுத்துள்ளார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் நடிகர் விஜய் கூட இந்த கல்லூரியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையம் வழியாக நடைபெற்றுள்ளதாம் அதில் சூர்யாவும் கலந்து கொண்டு தனக்கு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம் இவருக்கு கல்லூரியில் பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேடையில் பேசிய பழக்கம் இல்லையாம் ஆனால் முதல்முறையாக இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை அறிமுகப்படுத்தினாராம்.
அப்பொழுது பதட்டத்தில் என் பெயர் சரவணன் நான் டூகாம் படிக்கிறேன் என கூறிவிட்டாராம் அப்பொழுது இருந்த இவரை ஒரு சில நாட்கள் இவரது நண்பர்கள் ஏய் டூகாம் என்று தான் அழைத்து வந்தார்களாம் ஆனால் இவருக்கு கல்லூரி படிக்கும் பொழுது பாடவும் தெரியாதாம்.
ஆனால் பாடலுக்கு ஏற்றது போல் விசில் பயங்கரமாக அடிப்பாராம் இவர் விசில் அடிப்பதை வைத்து இவரது நண்பர்கள் இவருக்கு பிகில் என பட்டப்பெயர் வைத்து விட்டார்களாம்.மேலும் இந்த தகவல் தற்பொழுது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.