விஜய், பூஜா ஹெக்டேவுக்கு “பீஸ்ட்” திரைப்படத்தில் எந்த பெயரில் நடிக்கின்றனர் தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.

beast
beast

தளபதி விஜய் முதல்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் காமெடியாகவும் அதே சமயம் நல்ல கருத்துக்களை எடுத்து உணர்த்தக்கூடிய படங்களாக கொடுத்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

மேலும் டாப் நடிகர்கள் அனைவரும் இவரிடம் கதை கேட்க ஆசைப் பட்டனர் அந்த வகையில் விஜய்யும் கேட்டுள்ளார் அந்த கதை பிடித்துப் போகவே தற்போது பீஸ்ட் படமாக உருவாகி வருகிறதாம் இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் செல்வராகவன், யோகி பாபு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக இரவு பகல் பார்க்காமல் எடுக்கப்பட்டு அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சூட்டிங்கை முடித்து அதனை தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் எப்போது வெளியாகும் என்பது தான். உண்மையில் இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது இருப்பினும் அதற்கு முன்பாக பல அப்டேட்களை  கொடுக்க படக்குழு ரெடியாக இருக்கிறது.

இத்திரைப்படத்திலிருந்து இதுவரை  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அப்டேட்களை கொடுக்க இருக்கிறதாம். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்தும் வெளியாகி உள்ளது அதாவது விஜய் ஏஜென்ட் சாய்  என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டே ஸ்ரீ ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.