அஜித், விஜய் படம் இல்லை.. தீபாவளிக்கு ரிலீசாகும் படங்கள் என்னென்ன தெரியுமா.?

ajith, vijay
ajith, vijay

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியோர்கள் முக்கியமாக  நாட்களில் படங்களை இறக்குவார்கள் குறிப்பாக தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் இவரது படங்கள் கண்டிப்பாக இறங்கும் ஆனால் இந்த வருடம் அஜித் விஜய் ரஜினி கமல் யாருடைய படமும்..

இந்த தீபாவளிக்கு வெளிவரவில்லை மாறாக.. வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள்  படங்கள்  வெளிவர இருக்கின்றன. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் 1. தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர்  டாக்டர், டான் படத்தை தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.

இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஹார்ட்ரிக் வெற்றியை ருசிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  2. இந்த வருடத்தில் நடிகர் கார்த்தியின் மூன்று படங்கள் வெளிவர உள்ளன ஏற்கனவே விருமன் படம் வெளிவந்து வெற்றி கண்டது வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் அதனைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் சர்தார் திரைப்படம்.

திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து ரஜிஷா   விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியவர்கள் ஹீரோயின்னாக நடித்துள்ளனர் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த படத்தை கார்த்தி பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறாராம்.

3. நடிகர் ஜெயம் ரவிக்கு இந்த ஆண்டு முதலில் வெளியாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன் அதனைத் தொடர்ந்து அஹ்மத் இயக்கத்தில் உருவாகி உள்ள இறைவன் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.