நடிகர் விவேக் கடந்த மாதம் 17ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எதிர்பாராதவிதமாக இறந்தார். நடிகர் விவேக் சினிமாவிற்கு துணை இயக்குனராக அறிமுகமாகி இதன் மூலம் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதன் பிறகு இவரின் காமெடி திறமையை பார்த்து ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்தார்.
இப்படிப்பட்ட இவர் சினிமாவையும் தாண்டி சமூக நலன் மீது மிகவும் அக்கறை உடையவர். அந்தவகையில் அப்துல் கலாமின் தீவிர ரசிகர் விவேக். எனவே விவேக் அப்துல் கலாமின் கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்று முடிவு செய்தார்.
அந்த வகையில் தற்பொழுது வரையிலும் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு விட்டார். எனவே இவரின் ஒரு கோடி மரக் கன்றுகள் நட வேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் பல நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகள் நடுவோம் என்று புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்கள்.
மரக்கன்றை தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து மக்களும் மாஸ்க் ஒழுங்காக அணிய வேண்டும் என்பதை வீடியோ மூலம் அனைவருக்கும் வலியுறுத்தினார். அந்த வகையில் தான் இவர் இறக்கும் முதல் நாள் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கொரோனா தட்டுப்பூசி ஊசி போட்டுக் கொண்டார்
ஆனால் இவருக்கு ஏற்கனவே இதயத்தில் அடைப்பு இருந்துள்ளது எனவே தடுப்பூசி போட்டதும் விவேக்கை அதிகமாக பாதித்ததால் அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் விவேக்கிற்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள்.
மகன் தான் மூளைக் காய்ச்சலால் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வினி என்ற இரு மகள்கள் மட்டும் உள்ளார்கள். மூத்த மகள் ஆர்கி டேக்காகவும் இளைய மகள் சிட்டி வங்கியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் விவேக் மறைவதற்கு முன்பு மூத்த மகளான அமிர்த நந்தினிக்கு வரன் பார்க்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தனது மூத்த மகளை திருமணம் செய்து கொள்பவர் சமூக தொண்டு செய்பவராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தாராம். அப்படிப்பட்டவரை தேடி வந்த நிலையில் தான் எதிர்பாராதவிதமாக விவேக் உயிரிழந்துவிட்டார்.