ரஜினியின் “அண்ணாத்த” படத்தில் மீனா, குஷ்பூ – க்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் தெரியுமா.? ட்விஸ்ட் வைத்த சிறுத்தை சிவா.!

annathaa-
annathaa-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடித்து பின் ஆக்ஷன் திரைப்படங்களில் வெற்றியை கண்டார். இதன் மூலம் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் பெரும்பாலும் நடித்து வந்தார் தற்போது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு கிராமத்து கதை பக்கம் சென்றுள்ளார்.அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து கிராமத்து கதையில் நடித்துள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிராமத்து கதையில் ரஜினி நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு சிறப்பாகவும் ரஜினி ஆசையாகவும் நடித்துள்ளாராம்.ரஜினியுடன் இந்த படத்தில் பிரம்மாண்ட டாப் நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர். அந்தவகையில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, யோகி பாபு, சூரி போன்ற அடுத்தடுத்த நட்சத்திரப் பட்டாளங்கள் ஒரே படத்தில் இணைந்து உள்ளது. படக்குழுவை சந்தோஷப்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தை பற்றிய சில அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில் அடுத்த கணமே அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்கள் ரஜினிக்காக கடைசியாக ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாடலும் வெளியாகியுள்ளது. அந்த பாட்டில் ரஜினியும் நயன்தாராவும் டூயட் பாடி உள்ள சாரா காற்று என்ற இரண்டாவது பாடலையும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சியில் வைத்துள்ளது படக்குழு. மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது அதாவது ரஜினியின் சகோதரிகளாக மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டைன்மெண்ட் படமாக உருவாகி உள்ளதால் நிச்சயம் இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவிற்கு தியேட்டருக்கு இழுக்கும் என கூறப்படுகிறது