நடிகை சாய் பல்லவி தமிழ் தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து அசத்தி வருகிறார். சினிமா உலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வரும் சாய் பல்லவி இதுவரை பெரிய அளவில் கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் அவரது திறமையைப் பார்த்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வாய்ப்பை அள்ளிக் கொடுக்கின்றனர்.
அண்மையில் கூட தெலுங்கு நடிகர் நானி உடன் இணைந்து ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் நடித்து இருந்தார் இவர்களுடன் இணைந்து இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் சாய் பல்லவி .
அண்மையில் பேட்டி ஒன்றில் கடந்த வருடம் வெளியாகிய படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் எது என கேட்டனர் அதற்கு அவர் ஜெய்பீம் மற்றும் சர்தார் உத்தம். அதிலும் குறிப்பாக சர்தார் உத்தம் என்னை மிரள வைத்த திரைப்படம் சில நேரங்களுக்கு உலுக்கி எடுத்தது உண்மையில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்முன்னே காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அன்று முழுக்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அந்த காலத்தில் நடந்த அனைத்தையும் படத்தில் காட்டினார் படம் பார்க்கும்போது விக்கி கௌஷல் உடன் பயணித்த உணர்வு எனக்கு ஏற்பட்டதாக கூறினர் மேலும் ஜெய் பீம் திரைப்படம் 2021 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என கூறி பாராட்டினார்.