விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.
இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை பற்றி பல விசாரணைகள் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் போலீசார் சித்ராவை அவருடைய கணவர் செய்த கொடுமை ஆனால் மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவித்தார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சித்ராவின் ரசிகர்கள் சித்ராவின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு தங்களது துக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சித்ராவின் வீட்டில் அவருடைய குடும்பத்தினர்கள் சித்ராவின் பெரிய உருவ புகைப்படத்தை வைத்து சாமியாக நினைத்து கும்பிட்டு வருகிறார்கள்.
அவ்வப்போது அந்த புகைப்படத்தை அவருடைய உறவினர்கள் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.அதில் நீ எங்களை விட்டு பிரிந்து இரண்டு மாதம் 60 நாள் நிறைவு பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் சித்ரா உங்களை இப்படி எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.