தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் கடந்த தீபாவளி அன்று கூட சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம்.
திரையரங்கில் கோலாகலமாக வெளியாகியது. அண்ணாத்த படம் முதல் மூன்று நாட்களில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து நல்ல வசூலைப் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது.
மேலும் ரசிகர்களை பெருமளவு இந்த படம் கவராததால் வசூல் சற்று பின் தங்கியது ஒருவழியாக எப்படியோ கிட்டத்தட்ட 160 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பு அண்ணாத்தா படம் சூப்பர் ஹிட் படம் என கூறியிருந்தார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென இயக்குனர் சிவாவை தன் வீட்டிற்கு அழைத்து இருந்தார்.
காலை 11 மணிக்கு சென்ற இயக்குனர் சிவா ரஜினி வீட்டில் இருந்து மதியம் 2 மணி வரை அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. ரஜினிக்கு அண்ணாத்த படம் ரொம்ப பிடித்து இருந்தது மேலும் நல்லதொரு வரவேற்பை தற்பொழுதும் பெற்று ஓடிக் கொண்டிருப்பதால் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தார்.
இயக்குனர் சிவாவுக்கு தங்கச் செயின் பரிசளித்த அவரை பாராட்டினாராம். இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது மேலும் ரசிகர்கள் இந்த செய்தியை வேற லெவல் கொண்டாடி வருகின்றனர்.