ரஜினிக்காக பார்த்து பார்த்து எழுதப்பட்ட கதையில் நடித்த விஜய் – படம் வெளிவந்து என்ன ஆனது தெரியுமா.?

rajini and vijay
rajini and vijay

ரஜினியைப் போல தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் தளபதி விஜய்.. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அடுத்தபடியாக தற்போது விஜய் தான் இருக்கிறார் அந்த அளவிற்கு தற்போது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து  நட்சத்திரமாக இருக்கிறார்.

இப்பொழுது கூட தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் இதைப் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் தான் இயக்குனர் வெங்கடேஷ் ரஜினிக்காக பார்த்து பார்த்து எழுதினார். மேலும் அந்த  இடம்  பெற்றுள்ள வசனங்களும் ரஜினிக்காக தான் எழுதினாராம்.  ஆனால் அந்த கதையை ரஜினியிடம் அவரால் சொல்ல முடியாமல்   போக பிறகு நடிகர் விஜயிடம் சொன்னார்.

விஜய்க்கு அந்தக் கதையை பிடித்திருந்தாலும் முழு நேர ஆக்சன் படமாக இருந்ததால் சற்று தயங்கினார் ஆனால் இயக்குனர் வெங்கடேஷ் கதையை முழுவதுமாக சொல்ல பின் சம்மதித்து படத்தில் நடித்தார் அந்த படம் தான் பகவதி. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து வடிவேலு, ஜெய், பொன்னம்பலம்..

மற்றும் இளவரசு, ரீமா சென், தலைவாசல் விஜய், வசந்தி போன்ற  பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தை வில்லன், வல்லரசு போன்ற படங்களும் வெளிவந்தன அந்த படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.