தற்பொழுது பிரபல முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருப்பது விஜய் டிவி. பொதுவாக விஜய் டிவி தரமான கதை உள்ள சீரியல்கள் மற்றும் ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒரு நிகழ்ச்சியை இயக்கினார்கள் என்றால் அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. தற்போது விஜய் டிவியில் காமெடியில் கலக்கி வருபவர்கள் பாலா மற்றும் புகழ் தான்.
இவர்களின் எதார்த்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் மூலம் இவர்களுக்கு வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் புகழ் தனது சொந்த உழைப்பில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அவ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து புகழ் காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ரசிகர்கள் அவரை சூழ்ந்து கை கொடுத்து செல்பி எடுத்துக் கொண்டார்கள்.
இதனை பார்த்த பலரும் புகழ்க்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தார்கள்.இதனை தொடர்ந்து தற்போது புகழ் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள ஏதோ ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் புகழ் அவரின் யூடியூப் சேனலில் நடிகர் சந்தானத்தை சந்தித்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சந்தானம் புகழின் புதிய காரில் அவருடன் சென்று பின்பு அவரின் காரில் வைப்பதற்கு வெள்ளி விநாயகரையும் பரிசளித்துள்ளார்.
அந்தப் பிள்ளையாரின் புகைப்படத்தை புகழ் தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.