சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த “டான்சிங் ரோஸ்” இதற்கு முன்பு எந்தெந்த திரைப்படங்களில் நடித்துள்ளார் தெரியுமா.? சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்து உள்ளாரா.? தீயாய் பரவும் செய்தி.

dancing-rose
dancing-rose

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் சார்பட்டா பரம்பரை இதுவரை பல்வேறு விதமான குத்துச்சண்டை படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும் அதைவிட ஒருபடி மேலே சென்று தான் சார்பட்டா பரம்பரை படம்.

இது பரம்பரையில் நடக்கும் குத்து சண்டையை வைத்து மையமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு சீனும் வேற லெவலில் இருக்கிறது என படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா வல்லுனர்கள் பலரும் இந்தப் படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

மேலும் படம் முழுவதும் எந்த ஒரு சீனிலும் நமக்கு சலிப்புத் தன்மையை தோன்ற வைக்காதே அந்த அளவிற்கு அடுத்து என்ன நடக்கப் போகுது என்பதை விறுவிறுப்பாக எடுத்துள்ளது படக்குழு அதுவே இந்த படத்தின் வெற்றியாக பார்க்க படுகிறது.

இந்த திரைப்படத்தில் ஆர்யா, பசுபதி, john kokken, கலையரசன் மற்றும் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சபீர் ஆகியவர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர் அதிலும் இந்த திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரங்களில் ரசிக்கும் வைகையில் இருந்தது.

பார்ப்பதற்கு காமெடி பீஸ் போல இருந்தாலும் குத்துச்சண்டையில் அவர் பண்ணு ஸ்டைல் லுக் ஆகியவை ரசிகர்களை கவர்ந்து இழுத்தன இவர் இதுவரை மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் ஒன்று சார்பட்டா பரம்பரை இதற்கு முன்பாக அவர் தமிழில் பேட்ட, டெடி போன்ற படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது திறமை தற்போது அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழ்சினிமாவில் மேலும் இவருக்கு பல விதமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என தற்போது கூறிப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் சினிமா ரசிகர்கள்.