தமிழ் திரை உலகில் ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகர்களாக நடித்த பல நடிகர்களும் தற்போது தமிழ் சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை அந்த வகையில் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்த நடிகர் தான் காஜா ஷெரிப்.
இவர் குழந்தைப் பருவத்திலேயே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் மேலும் இவர் அந்தக் காலத்தில் நடித்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி விட்டது.
அந்த வகையில் பார்த்தால் இவர் இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார் மேலும் பாலக்காட்டு மாதவன் என்ற கதாபாத்திரத்தில் பாக்யராஜ் குருவாக இவர் பாக்யராஜின் சிஷ்யனாக டோலாக்கு வாசிக்கும் பையனாக இவர் நடித்து இருப்பார்.
அதைபோல் சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்திலும் இயக்குனர் விசு வின் கடைசி மகனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த இவர் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வரவில்லை அதற்கு முக்கிய காரணம் இவர் தற்பொழுது துபாய்,அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறாராம்.
தமிழ் நடிகர்கள்,நடிகைகளை அங்கு அழைத்துச் சென்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த நடிகர் தற்போது சினிமாவிற்கே வரவில்லை என்பதால் பல ரசிகர்களும் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் இந்த நடிகர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தார் ஆனால் இவருக்கு தற்போது இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று பரிதாபமாக இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.