தே** பய கெட்ட வார்த்தையை பேசியது விஜய் இல்லையா.? லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்

bad word speak vijay lokesh open talk
bad word speak vijay lokesh open talk

Leo bad word :  தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அது மட்டும் இல்லாமல் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. மேலும் இந்த ட்ரெய்லரில் விஜய் இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத்  தெளிவாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் ரவுடிகள்  லியோ தாஸை துரத்துவார்கள்.ஆனால் பார்த்தி லியோ போல் இருப்பதால்  ரவுடிகள் பார்த்தியை லியோ என்று நினைத்து தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் நாயகியாக நடித்துள்ள திரிஷா இனிமே நம்ம பயந்து பயந்து தான் ஓடணுமா என கேட்பார். பிறகு அந்த ட்ரெய்லரில் விஜய் ஒரு கெட்ட வார்த்தை பேசி இருப்பார். அந்த கெட்ட வார்த்தை தான் தற்பொழுது சமூக வலைதளத்தில் பெரும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

திடீரென மாற்றப்பட்ட லியோ பட ரிலீஸ் டேட்.. சிறப்புக் காட்சி எப்பொழுது தெரியுமா?

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கெட்ட வார்த்தை பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியதாவது. முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இந்த கெட்ட வார்த்தை விஜய் பேசியது கிடையாது. அந்த கேரக்டர் தான் பேசுச்சு முதலில் இதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

lokesh speak about bad word in leo movie
lokesh speak about bad word in leo movie

மேலும் அந்த காட்சி குறித்து  லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூறியதாவது ஒரு ஆறு நிமிட சிங்கிள் ஷாட் எடுத்தோம் அப்பொழுது இந்த கெட்ட வார்த்தையை விஜய் பார்த்தார் இதை நான் பேசியே ஆக வேண்டுமா என என்னிடம் விஜய் கேட்டார். அதற்கு நீங்க கண்டிப்பா இதை பேசித்தான் ஆகணும் என லோகேஷ் கூறியதாகவும் பிறகு விஜய் அந்த  காட்சிக்கு ரெடி ஆகி காட்சியை ஷூட் செய்தார்களாம்.

இசை வெளியீட்டு விழா… நாங்க பயந்துட்டோம் அதனாலதான்.. உண்மையை ஒப்புக்கொண்ட லோகேஷ் கனகராஜ்.!

அதேபோல் தளபதி விஜய் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வார் எந்த எக்ஸ்க்யூம் சொன்னது கிடையாது என விஜய் பற்றி பெருமையாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த கெட்ட வார்த்தைக்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம் இதற்கு எந்த வகையிலும் விஜய் காரணம் கிடையாது என பேசி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த காட்சியில் ஒரு இன்னசென்ட் கேரக்டர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தான் அந்த காட்சிகள் அமைக்கப்பட்டது.  அதனால் அந்த இடத்தில் அந்த வார்த்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது எனவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் இதுகுறித்து யாரும் விஜய் பற்றி தப்பாக நினைக்க வேண்டாம் எனவும் பேசியுள்ளார்.