இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து உள்ள திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதர் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த காதல் கட்சியாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி வசூலில் 75 கோடியை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய முதல் படமும் வெற்றி பெற்றது. அதே போல இவர் இயக்கி நடித்த முதல் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் இவர்களுடைய அந்த காதல் காட்சிகள் ரசிகர்களின் அனுபவமாக இருக்கிறது என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரபல இயக்குனர் அட்லி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டி உள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஒரு சிறப்பான காமெடி என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் பிரதீப் சிறப்பான கதைகளில் கலக்கியுள்ளீர்கள் என்றும் பாராட்டியிருக்கிறார்.
மேலும் லவ் டுடே படத்தில் நடித்த ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ், யுவன் சங்கர் ராஜா என ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்டியுள்ளார் அட்லி. இதை அடுத்து அட்லீயின் டிவிட்டிர்க்கு பதில் அளித்த இவானா மற்றும் பிரதீப் ரங்கநாதன் தங்களின் நன்றியையும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தன்னை கவர்ந்த இயக்குனர் தன்னை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பிரதீப் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு லவ் டுடே படத்தில் நடித்த இவானா அட்லியின் பாராட்டை பார்த்த இவர் இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இவனாவின் ட்விட்டை பார்த்த அட்லி கிரேட் வொர்க் இவானா என்று தனிப்பட்ட முறையில் பாராட்டி பதிவு செய்து இருக்கிறார்.