தமிழ் சினிமாவில் சமீப காலமாக மக்கள் கொண்டாடும் படியான அளவிலான சிறப்பான படங்கள் வரவில்லை என தமிழ் சினிமா ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் சரியான நேரத்தில் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார் பா ரஞ்சித் இவர் இயக்கத்தில் தினங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் மக்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அதற்குக் காரணம் இந்த படத்தில் ஹீரோ-ஹீரோயின்- னையும் தாண்டி அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம் இருந்ததோடு அதற்கு ஏற்றவாறு தனது தனித்துவமான நடிப்பை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தி இருந்ததால் இந்த படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தப்படத்தில் இருப்பினும் ஒரு சிலரின் நடிப்பு உச்சத்தில் இருந்தது என்று கூற வேண்டும் அந்த வகையில் பசுபதி, ஆர்யா, டான்சிங் ரோஸ் சபீர், ஜான் விஜய், john kokken மற்றும் பலரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
படத்தை பார்த்த மக்கள் தொடங்கி இயக்குனர்களும் இந்த படத்தை கொண்டாடினார் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் அஜித் இந்த திரைப்படத்தை முதல் நாளே படத்தைப் பார்த்துவிட்டு சார்பட்டா பரம்பரையில் நடித்த பிரபல நடிகர் ஒருவருக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல இந்த படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த john kokken என்பவருக்கு தான் போன் செய்து உள்ளார்.
காரணம் இவரது நடிப்பு மிக அருமையாக இருந்தது. john kokken இதற்கு முன்பு பல படங்களில் நடித்து உள்ளார். அதில் ஒன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து இருந்தார் அப்போது அஜித் இவரது திறமையை கண்டு உனக்கான நேரம் வரும் அதுவரை காத்திரு என அப்பொழுது கூறியிருந்தார்.
இப்பொழுது அது சார்பட்டா பரம்பரை படத்தில் கிடைத்துள்ளது அஜித் பார்த்து விட்டு உடனடியாக அவருக்கு போன் செய்து உனக்கான நேரம் ஆரம்பித்து விட்டது எனக் கூறி அவரை பாராட்டினார். அஜித்தே பாராட்டியது அவருக்கு உற்சாகம் தாங்கமுடியாமல் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றாராம் மேலும் பதினைந்து வருடங்களாக இதற்காக அவரும் காத்திருந்து உள்ளாராம்.