Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் பற்றிய செய்திகள் சோசியல் மீடியா பக்கங்களில் தினமும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் அஜித்தை பற்றி நமக்கு தெரியாத ஒரு செய்தி வெளிவந்து உள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் சமீபகாலமாக தனது படங்களில் சமூக அக்கரை உள்ள கருத்துக்களை அதிகம் திணித்து நடித்து வருகிறார் இதனால் ரசிகர்களையும் தாண்டி ஆடியன்சை வெகுவாக கவர்ந்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் கடைசியாக நடித்த “துணிவு படம்” வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாக உள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் இந்த மாதம் துபாய் மற்றும் அபுதாபி போன்ற இடங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. நடிகர் அஜித்தும் ஏற்கனவே துபாயில் வீடு வாங்கி உள்ளதால் அங்கு சென்று இவர் தங்கிய படப்பிடிப்பை முடித்து கொடுப்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றி ஒரு செய்தி வைரலாகி வருகிறது. சினிமாவுக்கு வந்த புதிய இவர் மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டாராம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த உடனேயே அவர் சுடு தண்ணி கொஞ்சம் வாங்கி மூஞ்சை கழுவி விட்டு படத்தில் நடிப்பாராம்..
இப்படி பல படங்களில் நடித்து வந்த இவர் சரவண சுப்பையா இயக்கத்தில் உருவான “சிட்டிசன்” திரைப்படத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்தார். இதற்காக மட்டும் தான் அவர் மேக்கப் போட்டுக்கொண்டு முதலில் நடித்தார் என கூறப்படுகிறது. அதன் பிறகு கூட அதிக படங்களில் இவர் மேக்கப் போட்டதே கிடையாதாம் எப்போதாவது மேக்கப் போடுவார் என பிரபல இயக்குனர் சொல்லி உள்ளார்.