வெளிநாட்டில் நடிகர் அப்பாஸ் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.? பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..

abbas
abbas

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக ஒரு காலகட்டத்தில் வளம் வந்து தற்போது வரையிலும் பெண்கள் மத்தியில் நீங்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் கதிர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.

இவருடைய முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை தந்த நிலையில் ஏராளமான பெண்களுக்கு பிடித்த நடிகராகவும் மாறியதால் இவரை சாக்லேட் பாய் என அழைத்து வந்தனர். இவ்வாறு இந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த நடிகர் அப்பாஸ் ஒரு காலகட்டத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தவறவிட்டார். இதன் காரணத்தினால் தற்பொழுது வரையிலும் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவரைப் பற்றி ஏராளமான தகவல்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபாஸ் ஏராளமான நல்ல கதை அம்சம் உள்ள வெற்றி திரைப்படங்களை தான் தவற விட்டுவிட்டதாகவும் அதற்கு முக்கிய காரணம் தனது மேனேஜர் எனவும் கூறினார். அதாவது தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை தன்னிடம் கூறாமல் அவரே புக் செய்ததால் இப்படி ஒரு நிலைமை எனவும் அப்பாஸ் கூறினார்.

இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக நடிகர் அப்பாஸ் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பச்சக்கல்லம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பட பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு அவர் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.