“அண்ணாத்த” படத்தை பார்த்துவிட்டு ரஜினியின் மகள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.? சந்தோசத்தில் சிறுத்தை சிவா.

annathaa
annathaa

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்பொழுது சிறுத்தை சிவாவுடன் கோர்த்து தனது 169வது திரைப்படமான அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்து வெளியாக இருக்கிறது.

இந்த படம் கிராமத்து கதையில் உருவாகி நகர் பக்கம் நகர்ந்து செல்கிறது அதனால் படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ்  போன்ற பல பிரபலங்கள் தனது நடிப்பு திறமையை அழகாக வெளிப்படுத்தி ரஜினிக்கு துணையாக இருக்கின்றனர்.

இதனால் இந்த படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்த படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்துள்ளதால் இப்பவே படம் புக் செய்யப்பட்டு வருகிறது. இப்படியிருக்கின்ற நிலையில்   ரஜினியின் மகள் சௌந்தர்யா இந்த திரைப்படத்தை பார்த்து முடித்துள்ளார்.

அதை விட்டு வெளியே வந்து அவர் கூறியது. படம் மிக சூப்பராக இருக்கிறது. ரஜினியும் சிவா அவர்களும் மீண்டும் ஒருமுறை இணைய வேண்டும் என்பது எனது விருப்பம் என தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறியது  அண்ணாத்த படத்துல நீங்க என்ன பண்ணி இருக்கீங்கன்னு தெரியாது ஏன்னா மக்கள் இன்னும் பார்க்கல சிவா சார் ஆனால் நான் பார்த்துட்டேன் படம் பார்த்துட்டு நான் வெளியே வந்த உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல தண்ணியோடு

நீங்க பண்ணுனது மேஜிக் இல்லை அதுக்கும் மேல  என்ன சொல்லணும்னே தெரியல. என தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாகவும் அப்பாவோட மகளாகவும் நீங்க அப்பாவை பார்த்து கிட்ட முறையை வைத்து கண்டிப்பா நீங்க அப்பா, உங்க மொத்த குழு அண்ணாத்த படத்துக்கு அப்புறம் திரும்ப வேலை பார்க்கணும் என கேட்டுக்கொண்டார்.